Che Guevara - Oru Poraliyin Vazhkkai Volume -1 & Volume -2 | சே குவேரா ஒரு போராளியின் வாழ்க்கை பாகம் 1 & பாகம் 2(Paperback, Jon Lee Anderson | ஜான் லீ ஆண்டர்சன் தமிழில்: ஜெ.தீபலட்சுமி)
Quick Overview
Product Price Comparison
ஜான் லீ ஆண்டர்சன் (1957) ஓர் அமெரிக்க வாழ்க்கை வரலாற்றாசிரியர், எழுத்தாளர், புலனாய்வு நிருபர். போர் நிருபர் மற்றும் தி நியூயார்க்கரின் பணியாளர், எழுத்தாளர், சே. பிடல், குறித்துத் தொடர் ஆய்வு செய்து நூல்களை வெளியிட்டுள்ளார். தான் வாழும் காலத்திலேயே பெரும் வரலாற்று நாயகருக்குரிய புகழை அடைந்தவர் சே குவேரா. மரணத்துக்குப் பின்பு உலகப்புகழ் பெற்ற மாவீரராகத் திகழ்கிறார். புரட்சிகரப் போராளி, இராணுவ வல்லுனர், சமூகத் தத்துவவியலாளர், பொருளாதார அறிஞர், மருத்துவர், மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவின் உற்ற நண்பரும் ஆலோசகரும் ஆவார். சே குவேரா கண்ட கனவு மகத்தானது. லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும், பின்பு உலகின் வளரும் நாடுகள் அனைத்தையும் ஆயுதப் புரட்சியின் மூலம் ஒருங்கிணைத்து என்றென்றைக்குமாக வறுமை, அநீதி, மக்களைப் பல நூற்றாண்டுகளாய்ச் சுரண்டி இரத்தம் சிந்த வைத்த அற்பத் தேசியவாதங்கள் ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதே அந்தக் கனவு. இந்த மாபெரும் லட்சிய வேட்கையினால் உந்தப்பட்டு தன் வாழ்க்கையைச் செலுத்திய சே அதற்கான விலையாக இறுதியில் தன் உயிரை ஈந்தார். சே குவேரா: ஒரு போராளியின் வாழ்க்கை ஹவானா, அல்ஜியர்ஸ் ஆகிய புரட்சித் தலைநகரங்களுக்கு இடையே ஊடாடுவதோடு பொலிவியா மற்றும் காங்கோவின் போர்க்களங்களிலும் பயணிக்கிறது. மாஸ்கோ வாஷிங்டன் நகரங்களின் அதிகார பீடங்கள் குறித்து மட்டுமல்லாது மியாமி, மெக்சிகோ. மற்றும் கவுதமாலாவில் வசித்த அரசியல் அகதிகளின் கதைகளையும் சொல்லும் இந்நூல் புரட்சி, பன்னாட்டு ராஜ தந்திரங்கள், மற்றும் ரகசியச் செயல்பாடுகள் குறித்த சுவாரசியமான தொகுப்பாகும். உலகையே ஆட்டுவித்த இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு இடையிலான பலப்பரீட்சையையும் அவை தோற்றுவித்த சிற்சிறு போர்கள் குறித்தும் பேசும் இந்நூல் பரந்து விரிந்த பன்னாட்டுப் பார்வையைக் கொண்டிருக்கிறது. நூலாசிரியர் ஜான் லீ ஆண்டர்சனுக்குக் கியூபாவின் அரசு ஆவணங்களைத் தடையில்லாமல் ஆய்வு செய்யும் உரிமையும், சே வின் மனைவி அலெய்டாவின் முழு ஒத்துழைப்பும் கிடைத்திருக்கிறது.